Fire at Selangor wholesale market fully extinguished

Fire at Selangor wholesale market fully extinguished

சிலாங்கூர் மொத்த வியாபாரச் சந்தையில் ஏற்பட்ட தீ இன்று காலை 6.20 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்ட நிலையில் , பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.இடிபாடுகளில் பாதிக்கப்பட்டவர் எவரும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக அகழ்வு இயந்திர (Jengkaut) உதவிக்காக காத்திருப்பதாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்தது.அப்பகுதியில், தீயணைப்பு மீட்பு துறையின் தடயவியல் பிரிவின் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவதாக, மாநில தீயணைப்பு துறையின் நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் தெரிவித்தார். அந்த மொத்த விற்பனைச் சந்தையின் பிளாக் பி4 (Blok B4) இல் உள்ள மின்சாதனங்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் விற்கும் கடைத் தொகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.மேலும் செய்திக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:Untuk Maklumat Terperinci Sila Klik di Pautan Ini:Selangor Indru Tamil Portalhttps://selangorkini.my/ta/te#latest #mediaselangorta #mediaselangor #Fire #Selangor #wholesale #market #fully #extinguished #trendingmalaysia #malaysiatamilnews #selangortamilnews #fyp #foryoupage

Kathiravan Manoharan
24 ஜூலை 2026
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.